ஜிஎஸ்டி அமல்படுத்தினால் 30 சதவீதம் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறையும்: கிரைஸில் அறிக்கை

ஜிஎஸ்டி அமல்படுத்தினால் 30 சதவீதம் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறையும்: கிரைஸில் அறிக்கை
Updated on
1 min read

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப் பட்டால் சரக்கு போக்குவரத் துக்கான செலவுகள் குறையும் என்று தரச் சான்று நிறுவனமான கிரைஸில் கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான செலவுகளில் 30 சதவீதம் வரை மிச்சமாகும் என்றும், 3 - 4 வருடங்களில் சரக்கு கிடங்கு களுக்கான செலவுகளும் மிச்ச மாகும் என்றும் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் பட்சத்தில் கிடங்குகள் மற்றும் கொள்முதல் இருப்புக்கான செலவுகள் குறையும். இதனால் சரக்கு போக்குவரத்து செலவுகள் மிச்சமாகும்.

மாநிலங்களுக்கு இடையே யான சோதனைச் சாவடிகள் நீக்கப்படும் என்பதால் பொருட்கள் குறைந்த செலவில் விரைவாக சென்றடையும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

முக்கியமாக இதன் மூலம் நுகர்வோர் பொருட்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பயனு டையதாக இருக்கும்.

உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனையில் 5 முதல் 8 சதவீத தொகையை சரக்கு போக்குவரத்துக்கு செலவிடு கின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தும் பட்சத்தில் அடுத்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் கிடங்கு செலவுகள் விற்பனையில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை குறையும்.

சோதனைச் சாவடிகள் நீக்கப்படுவதால் ஏற்படும் தாமத செலவுகளில் 0.4 சதவீதம் முதல் 0.8 சதவீதம் சேமிக்கலாம். இதன் மூலம் மொத்த விற்பனையில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீத தொகையை மிச்சப்படுத்த முடியும் என்று கிரைஸில் ஆய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் பிரசாத் கோபர்கர் கூறினார்.

சரக்கு போக்குவரத்துக்கு ஆகும் மொத்த செலவுகளில் 20 சதவீதம் வரை நிறுவனங்களுக்கு சேமிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நாட்டை ஒரே சந்தையாக ஜிஎஸ்டி மாற்றும். இது ஜிஎஸ்டியின் சாதகமான விஷயம் என்றும், நடுத்தர காலத்தில் இந்திய ஜிடிபி 2 சதவீதம் ஏற்றம் காண உதவும் என்றார். சரக்கு போக்குவரத்தில் 25 சதவீத நேரம் பல சோதனை சாவடிகள் மற்றும் நகர நுழைவு மையங்களில் வீணாகிறது. இதன் மூலம் செயல்பாட்டுக்கான செலவு அதிகரிப்பு மற்றும் கொள்முதல் பொருட்களை இருப்பு வைக்கும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.

இந்த சட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில் நுகர்வோர் பொருட்கள் துறை சரக்குகளை இருப்பு வைத்து விற்கும்போது சிஎஸ்டி கட்ட தேவையில்லை. இதன் மூலம் சுமார் 30 சதவீதம்வரை சரக்கு போக்குவரத்து செலவுகளில் பயனடையலாம்.

எப்எம்சிஜி மற்றும் மருந்து பொருட்கள் துறை 15 முதல் 20 சதவீதம் வரை பயனடையும். இந்த துறையில் இயல்பாகவே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதால் இவற்றுக்கான போக்குவரத்து செலவுகள் 15 - 20சதவீதம் வரை குறையும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 01 முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில் கிரைஸில் ஆய்வு வெளி வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in