95 ஆயிரம் பேருக்கு வேலை: அசெஞ்சர் முடிவு

95 ஆயிரம் பேருக்கு வேலை: அசெஞ்சர் முடிவு
Updated on
1 min read

சர்வதேச ஆலோசனை மற்றும் வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனமான அசெஞ்சர் நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 95 ஆயிரம் பணியாளர்களை புதிதாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிதி ஆண்டு செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை கணக்கிடப்பட்டுகிறது.

இந்த காலாண்டில் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 3,36,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 2,37,000 பணியாளர்கள் உள்ளனர். இதனால் ஆகஸ்ட் மாதத்துக்குள் 95 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டேவிட் ரோலண்ட் தெரிவித்தார்.

தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் 3,19,656 பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த இலக்கினை அசெஞ்சர் எட்டும் பட்சத்தில் பணியாளர்கள் எண்ணிக்கையில் முதலிடம் பிடிக்கும். நடப்பு நிதி ஆண்டில் டிசிஎஸ் 60,000 நபர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in