

நடப்பு நிதியாண்டில் இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருக்கும். 2016-17 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் சிட்டி குழும அறிக்கை கூறியுள்ளது. பொருளாதார மறு சீரமைப்பு வேலைகள் மற்றும் ஆர்பிஐ நிதிக் கொள்கைகளில் சுழற்சி காரணமாக இந்த உயர்வு இருக்கும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உலக அளவில் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களின் முதலீடு மற்றும் செலவுகள் அதிகரித்துள் ளதால் 2014-15 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்க்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அடுத்தடுத்து வரும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப் படுவது மற்றும் பொருள்களின் விலை குறைவு காரணமாக 2015-16 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக அதிகரிக்கும். இது 2016-17ம் நிதியாண்டில் 8.1 சதவீதமாக வளரும் என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.