

மைக்ரோசாப்ட் நிறுவனம் முதன் முதலில் சென்னையில் தனது சில் லரை விற்பனையகத்தை திறந்துள் ளது. ஏற்கெனவே நோக்கியா பிரியாரிட்டி ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் இது இயங்கி வந்தது.
செல்போன் தயாரிப்பில் முன் னணியில் இருந்த நோக்கியா நிறு வனத்தை மைக்ரோசாப்ட் வாங் கிய பிறகு பிராண்டை முன்னிலைப்படுத்த பல முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மைக்ரோசாப்ட் சில்லரை விற்பனையகத்தை திறந்து வைத்து பேசினார் நோக்கியா இந்தியா நிறுவனத்தின் தென்னிந்திய விற்பனை பிரிவு இயக்குநர் டி.எஸ். ஸ்ரீதர். இந்தியாவில் இதன் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவத்தை கொடுக்கும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். நோக்கியா இந்தியா தற்போது மைக்ரோசாப்ட் போன்களை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் தற்போது 441 மைக்ரோசாப்ட் விற்பனையகங் கள் உள்ளன. மேலும் 8872 மொபைல் விற்பனையகங்கள் உள்ளன. இதன் மூலம் மைக்ரோ சாப்ட் பிராண்டை ஊக்குவிக்க உள்ளோம். எனவே எங்களது பயணத்தில் இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். நுகர்வோ ருக்கு சலுகைகள் வழங்குவதற் கான முயற்சிகளிலும் உள்ளோம். என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள 441 விற் பனையகங்களும் மைக்ரோசாப்ட் வசம் வந்துவிட்டன. சென்னையில் இதன் முதல் விற்பனையகத்தை திறந்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அனைத்து விற் பனையகங்களும் திறக்கப்படும், மேலும் மைக்ரோசாப்ட் விற்பனை யகங்களுக்கான முத்திரையும் செயல்பட தொடங்கும் என்றார்.
நோக்கியா சர்வீஸ் மையங்கள் நோக்கியா கேர் என்கிற பெயரிலிருந்து இனி மைக்ரோசாப்ட் கேர் என்கிற பெயரில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.