வணிக நூலகம்: முயன்றால் முடியும்

வணிக நூலகம்: முயன்றால் முடியும்
Updated on
3 min read

புத்தகத்தின் தலைப்பிற்கும் மதிப்புரையின் தலைப்பிற்கும் மொழி மாற்றத்தில் வேறுபாடு இருப்பதாகத் தோன்றும். மார்க் டுவைய்ன் என்ற அறிஞர் கூறியதை போல விழுங்க முடியாததை விழுங்கியே தீர வேண்டும். எதிர் கொள்ள முடியாத வைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

வேலைகளை தள்ளிப்போடுவதும் விட்டு ஓடுவதும், புரியாத பாவனை களை காட்டுவதும் எதிர்கொள்ள வேண்டிய நிகழ்வுகளைத் தவிர்க்க உதவாது. மாறாக என்றேனும் ஒரு நாள் மறுபடியும் வந்து மலைப்பை ஏற்படுத்தும். அதனால் இரண்டு தவளைகள் இருந்தால் அதில் மிகவும் மோசமான அருவருப்பான தவளையை முதலில் விழுங்குவது அறிவுடமை.

அதே போல இரண்டு முக்கியமான வேலைகளில் மிகவும் கடினமான, மிகவும் மலைப்பை ஏற்படுத்தக் கூடிய வேலையை முதலில் முடிப்பது அறிவுடமை.

சில நேரங்களில் எளிய பணியை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தைத் தவிர்த்து ஒரு சவாலாக இதை செய்து பார்த்தால் தவளையை விழுங்குவது பற்றி புரிந்துகொள்ள முடியும்.

நேர மேலாண்மையும், வேலை செறிவுகளும் பற்றி விளக்குவதை யும் தாண்டி எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் சில எளி மையான காரணங்களை கூறி நூலா சிரியர் இந்த நூலை கீழே வைக்க விடாமல் செய்திகளை நம்மோடு இணைத்துக்கொள்ள செய்கிறார்.

சீனிவாசன் என்ற நண்பன் ஒரு சின்ன காகிதத்தில் செய்ய வேண் டிய வேலைகளை பற்றியும் முடிக்க வேண்டிய கால அவகாசம் பற்றியும், விளைவுகளின் நிலைமை பற்றியும் எழுதி வைத்திருப்பார். மனதால் நினைத்து செயலை செய்ய முடியாத வர்கள் எழுதி வைத்துக் கொண்டு என்ன கிழிக்கிறார்கள் என்று உள் மனதின் கூவல் கேட்கிறது. ஆனால் நம்மால் செய்ய முடியாதவைகளை அந்த நண்பர் எளிதாக செய்து முடித்து பகிர்ந்து கொள்ளும் போது இந்த புத்தகத்தின் முதல் விதி அட! உண்மையாக இருக்கிறதே! என்ற வியப்பை தோற்றுவிக்கிறது.

எண்பது, இருபது (80:20) என்ற விழுக்காடு பொருளாதாரத்திற்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும், வேலைக்கும் பொருந்தும். மகேஸ் வரன் என்ற நண்பர் மிகவும் முக்கிய மான 20% வேலைகளை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செய்வார். அவரிடம் கேட்டால் வேடிக்கையான பதிலை கூறுவார். 20% வேலை களுக்காக, 80% நேரத்தை செலவு செய்கின்றோம். உதாரணமாக ஒரு வாரத்திற்கோ, ஒரு மாதத்திற்கோ வேண்டிய பொருட்களை ஒரே முறை வாங்கும் பொழுது எவ்வளவு நேரம், பணம் மற்றும் திரும்ப, திரும்ப கடைக்கு செல்லும் பாங்கு தவிர்க்கப்படுகிறது என்று சொல்லி புரியவைத்தார்.

சிவதாசன் என்ற உடன் பணி புரிபவர் எப்பொழுது பேசினாலும் விளைவுகள் பற்றியும், எவ்வளவு சரியான முறையில் பணிகளை குறிப் பாக செயலாற்ற வேண்டும் என்றும் கூறிக்கொண்டே இருப்பார். மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத் தும் செயல்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை அளிப்பார்.

மணி எப்போதுமே வேலையின் மதிப்பையும். முக்கியத்துவத்தையும் கணக்கிட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து கையில் உள்ள பணிகளை வரிசைப்படுத்துவார் அவரிடம் கேட் டால் ஐந்து நிமிடங்களில் அத்தனை வேலைகளையும் கூட்டி கழித்து பார்த்தால் முக்கியமான வேலை புலப்படும். அந்த வேலையை செய் வதுதான் நமக்கும் நல்லது நிறுவனத் திற்கும் நல்லது என்று கூறுவார்.

இளங்கோ என்ற நண்பர் எப்பொழுது பேசினாலும் மூன்று மூன்றாகவே பேசுவார் மிக முக்கியமான மூன்று, மிக தேவையில்லாத மூன்று, எதிர் காலத்தில் தேவையான மூன்று, என்றைக்கும் தேவையான மூன்று என்று கைவசம் இருக்கும் செயல்களையும், பணிகளையும் வரிசைப்படுத்துவார். முடிவில் எதிர்காலத்தையும், தேவை யானதையும் செய்து முடிப்பார் அப்பொழுது இந்த மூன்று பணிக ளுக்குள் 90% வெற்றி வாய்ப்புகள் குவிந்திருக்கும்.

கீழே சொல்லப்பட்டிருக்கும் விதிகள் பின்பற்ற எளிதாக இல்லாமல் இருக்கலாம். சில நேரங்களில் ஏதோ யாரோ யாருக்கோ செல்வது போன்று தோன்றும் மற்றும் நம்ப முடியாத செய்து முடிக்க முடியாத மலைப்பை உருவாக்கும். மாறாக இவைகளை உங்களின் குணாதிசயமாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த பழக்க வழக்கங்கள் தனிநபர் மேலாண் மைக்கும் உங்களுடைய ஆளுமையின் மாற்றத்திற்கும், எதிர்கால வெற்றிக்கும் ஏராளமான வழிகளில் தாராளமாக வழிக்காட்டும்.

தொடங்கும் முன் முழுமையாக தயார் செய்து கொள்ளுதல்

ஒரே முறையில் செய்து முடிக்க கூடிய பெரிய கடினமான பணியை தேர்ந்தெடுத்தல்.

திறமையான சிறப்பான செயல் பாடுகளை முதலில் முடித்து நம்பிக் கையையும், வெற்றியையும் வசப் படுத்த வேண்டும்.

முக்கியமான தடைகளை கண்ட றிந்து அவைகளை நீக்கும் பொழுது வெற்றி வேகமாக வந்து சேரும். வேண்டாதவைகள் விலகி போகும்.

மற்றவர்கள் செய்வார்கள் என்பதை தவிர்த்து, என்னால் எதை அதிகபட்சம் செய்ய முடியும் என்று முனைந்து செய்தால் விளைவு வெற்றியை தவிர வேறொன்றும் இல்லை.

சுய ஆற்றலை சரியான நேரத்தில் சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும், நாள் முழுவதும் பணிகளை இழுத்துக் கொண்டே இருப்பதை விட காலை மதியம் மாலை இந்த நேரங்களில் விரைவாக செயல்படும் நேரத்தை அறிந்து செயல் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆக்கபூர்வமான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு முறை இலக்குகளை அடையும் முன்பும் தன்னை தானே தட்டிக் கொடுத்து, முடித்ததை எண்ணி மகிழ்ந்து அடுத்ததை நோக்கி செல்லு தல் வேண்டும்.

தொழில்நுட்ப ஆக்கபூர்வங்களை முறையாக பயன் படுத்த வேண்டுமே தவிர, அவற்றின் ஆளுகைக்கு நாம் ஆட்படக்கூடாது (உதாரணமாக கைப்பேசி, கணிணி, தொலைக்காட்சி, செய்திகள் மற்றும் பிற)

பகுத்து சிறு சிறு பாகங்களாக பெரிய கடினமான வேலைகளை மாற்றிக் கொள்வது உற்சாகத்தையும், நிறைவையும் சேர்த்து தரும்.

ஒரு நாளிலோ, வாரத்திலோ எப்பொழுது அதிக நேரம் கிடைப்பதாக உணர்கின்றோமோ, அந்த நேரத்தில் முக்கியமான, குழப்பமான, கடினமான வேலைகளை முடிக்க வேண்டும்.

வேகமாகவும், நல்ல முறையிலும் செய்து முடிப்பவர்களை எல்லோரும் பாராட்டுவர். பாராட்டு பெறுவதற்கு அந்த பழக்க வழக்கங்களை பின்பற்று வது அவசியம். அதிகபட்ச செயல் திறனுக்கும், நிறைந்த உற்பத்தி திறனுக்கும் ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக பிரித்து முழு கவனம் செலுத்தி 100% அவைகளை முடிக்கும் வரை ஒன்றியிருப்பது வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும்.

அருவருக்கதக்க உயிரோடு இருக்கும் தவளையான கடின, குழப்ப, காலதாமதம் செய்யும், இலக் குகளை வேறுப்படுத்திக் காட்டும் பணி களை நேர்க்கொண்டு முடிக்கப் பாருங்கள். அவ்வாறு நேர்கொள்ளும் போது மலையை தூக்கியவன் கல்லை தூக்கியது போல எதிர்வரும் கடினமான, குழப்பமான பணிகளை எளிதாக கையாளலாம். முயற்சி திரு வினையாக்கும். முயன்றால் முடியும்.

rvenkatapathy@rediffmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in