ஹோண்டா ஆக்டிவாவை எதிர்கொள்ளும் ஹீரோ டூயட்!

ஹோண்டா ஆக்டிவாவை எதிர்கொள்ளும் ஹீரோ டூயட்!
Updated on
1 min read

மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஒரு காலத்தில் தனது கூட்டாளி நிறுவனமாக இருந்த ஹோண்டா நிறுவனத் தயாரிப்பான ஆக்டி வாவை எதிர்கொள்ள `டூயட்’ என்ற பெயரிலான ஸ்கூட்டரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி ஆண்களும் பயன் படுத்தும் வகையில் முற்றிலும் உலோகத்தாலான மேல் பாகத் தைக் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகிறது. டூயட் ஸ்கூட்டருடன் மேம்படுத்தப்பட்ட மேஸ்ட்ரோ மாடல் ஸ்கூட்டரும் சந்தைக்கு வர உள்ளன. இது `மேஸ்ட்ரோ எட்ஜ்’ என்ற பெயரில் வர உள்ளது. இத்தகவலை ரோமில் சமீபத்தில் நடைபெற்ற விற்பனையாளர்களுக்கான பிரத்யேக கூட்டத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

110 சிசி திறன் கொண்ட டூயட் ஸ்கூட்டர் மிகவும் ரகசியமாக வடிமைக்கப்பட்டு, சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் கண்காட்சியில் கூட இதை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் காட்சிக்கு வைக்கவில்லை. அந்த அளவுக்கு ரகசியமாக அதேசமயம் அதிரடியாக சந்தை யில் அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் பெயரே ஜூன் 4-ம் தேதிதான் வெளியிடப்பட்டது. பண்டிகைக் காலத்தில் இதை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

டூயட் ஸ்கூட்டரில் வெளிப்புற பெட்ரோல் நிரப்பும் வசதி, டியூப் லெஸ் டயர், டெலஸ் கோப்பிக் முன்புற சஸ்பென்ஷன், டிஜி அனலாக் கன்சோல், ஒருங்கி ணைந்த பிரேக்கிங் சிஸ்டம், ரிமோட் சீட், பெட்ரோல் மூடி திறக்கும் வசதி, யூஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் சீட் அடிப்பகுதியை இரவில் திறந்து பார்க்கும் போது பொருள்களை தேட வசதியாக விளக்கு ஆகியன உள்ளன.

ஸ்கூட்டர் பிரிவில் ஹீரோ தயாரிப்புகளுக்கு போட்டியாக இருப்பது ஹோண்டா நிறுவனத் தின் ஆக்டிவா உள்ளிட்டவைதான். இதை எதிர்கொள்ள வசதியாக புதிய உத்திகளை கடந்த பிப்ரவரி மாதம் வகுத்ததாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் ஹீரோ மோட்டோ கார்ப்பின் ஸ்பிளெண் டர் பைக்குகளுக்கு போட்டியாக டிரீம் பிரிவு மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி மக்களை ஈர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் இது அந்த அளவுக்கு எடுபடவில்லை என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in