

திவால் நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்கான கோரிக்கையை அமெரிக்க துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் கோல்ட் கோரியுள்ளது. இத்தகவலை வால் ஸ்டிரீட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் இந்நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு காரணங்களால் இந்நிறுவனம் கடும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது.
இதனால் திவால் பாதுகாப்பு கோரிக்கையை வைத்துள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சிலர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த கோல்ட் நிறுவனம் 1855 ம் ஆண்டில் சாமுவேல் கோல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் கடன் சுமையி லிருந்து மீள முதலீடுகளை எதிர் நோக்கியுள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவ னத்தில் முதலீடு செய்துள்ளவர் களிடமிருந்து முதலீடுகளை எதிர்நோக்கியுள்ள அதே சமயத்தில் மறு சீரமைப்புக்குப் பிறகும் திவாலானால் இத் தொழிலைத் தொடர பாதுகாப்பு கோரியுள்ளது. இந்நிறுவனத்துக்கு மொத்தம் 35.50 கோடி டாலர் கடன் உள்ளது.