Published : 04 Jun 2015 10:27 AM
Last Updated : 04 Jun 2015 10:27 AM

மாருதி சுஸுகியின் புதிய ரக டீசல் கார் அறிமுகம்

செலிரியோ பெட்ரோல் மாடல் காரை அடுத்து டீசல் மாடல் காரினை அறிமுகம் செய்தது மாருதி சுஸூகி இந்தியா. இந்த காரின் ஆரம்ப விலை 4.65 லட்ச ரூபாய் ஆகும். 793 சிசி திறனுடைய இந்த காரில், ஒரு லிட்டருக்கு 27.62 கிமீ பயணம் செய்யமுடியும். இது ஆட்டோ கியர் மாடல் காராகும்.

இப்போதைக்கு இந்தியாவில் ஒரு லிட்டருக்கு அதிகம் பயணம் செய்ய முடிகிற கார் இதுவாகும். இதற்கு முன்பு ஸ்விப்ட் டிசையர் டீசல் மாடல் கார் லிட்டருக்கு 26.59 கி.மீ மைலேஜ் கொடுத்தது.

சுஸூகி மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் முதல் டீசல் ரக இன்ஜின் இதுவாகும். இதற்காக 900 கோடி ரூபாய் இந்த நிறுவனம் முதலீடு செய்தது. இந்த காரின் 97 சதவீத பாகங்கள் உள்நாட்டில் இருந்து வாங்கப்படுகிறது.

நான்கு வகைகளில் இந்த கார் வெளியாகி இருக்கிறது. அடிப் படை மாடல் காரின் விலை 4.65 லட்ச ரூபாய். உயர் ரக மாடல் காரின் விலை 5.71 லட்ச ரூபாய். (டெல்லி விலை).

இதன் பெட்ரோல் கார்கள் 3.90 லட்சம் முதல் விற்பனையாகிறது. பெட்ரோல் கார் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதுவரை 95,000 கார்கள் விற்பனையானது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x