பருவ நிலை மாறுபாடு: மாணவர்களுக்கான கட்டுரை, புகைப்படப் போட்டி- ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் அமைப்பு, ‘தி இந்து’ ஏற்பாடு

பருவ நிலை மாறுபாடு: மாணவர்களுக்கான கட்டுரை, புகைப்படப் போட்டி- ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் அமைப்பு, ‘தி இந்து’ ஏற்பாடு
Updated on
2 min read

இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் அமைப்பு, `தி இந்து’ அரசியல் மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு மையத்துடன் இணைந்து இந்தியாவில் தட்பவெப்ப மாற்றம் குறித்த கட்டுரைப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கட்டுரை யின் தலைப்பு My Climate, My Future. இத்துடன் புகைப்பட போட் டிக்கும் ஐரோப்பிய யூனியன் ஏற்பாடு செய்துள்ளது.

பருவநிலை மாறுபாடு என்பது இன்று ஒவ்வொருவர் மனதிலும் உள்ள மிக முக்கிய மான விஷயமாகும். கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. பனிப் பாறைகள் உருகத் தொடங்கி யுள்ளன. அதேசமயம் ஆறுகள் வற்றி வருகின்றன. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு முற்றிலுமாக தீர்ந்து போகும் வரை நாம் பயன்படுத்தப் போகிறோமா? அவ்வாறு பயன்படுத்தினால் புவியின் வெப்பம் உச்சத்தைத் தொட்டுவிடும்.

இது குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், அதற்குரிய தீர்வுகளை அளிக்கவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கட்டுரைப் போட்டி மற்றும் புகைப்பட போட்டி மூலம் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துள்ளதை அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய தீர்வுகளையும் அளிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிளைமேட் டிப்ளமசி தினம் உலகம் முழுவதும் கடந்த 17-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. புவியின் தட்ப வெப்ப நிலை குறித்த மிக முக்கியமான கூட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் பாரீஸில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப நிலை மாறுபாடு (யுஎன்எப்சிசிசி) குறித்த மாநாட்டில் இதற்குரிய ஒப்பந்தங்கள் எட்டப்பட உள்ளன. இதில், புவியின் வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்காக ஒவ்வொரு நாடும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வகுக்கப்பட உள்ளன.

இதை முன்னிட்டு நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்கள் பங்கேற்கலாம். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 16 ஆகும். கட்டுரைகள் ஆங்கிலத்தில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை எழுதலாம்.

Climate Change in India: Challenges and Solutions

Making India’s Growth Sustainable

Clean Development In India: the Way Forward for Towns and Cities

முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் சிறந்த மாணவர்கள் நான்கு நாள் ஐரோப்பிய நாடுகளில் இலவசமாக சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவர்.

கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகளை பின்வரும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: >www.thehinducentre.com

புகைப்பட போட்டி:

ஆயிரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாததை ஒரு புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்த முடியும். புகைப்பட போட்டிக்கான இறுதி நாள் செப்டம்பர் 17 ஆகும். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் 3 புகைப்படங்களை அனுப்பலாம். தட்ப வெப்ப மாற்றத்தை எவ்விதம் உணர்கிறார்கள் என்பதை விளக்குவதாக புகைப்படம் இருக்க வேண்டும். தட்ப வெப்ப மாற்றம், சவால்கள், தீர்வுகளை விளக்குவதாக புகைப்படம் அமைய வேண்டும். பெயர் பதிவு, விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள இணையதள முகவரி:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in