

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிக்ஸ் வங்கி மற்ற சர்வ தேச நிதி அமைப்புகளுக்கு போட்டி அல்ல என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலவாணி மையம் ஆகியவற்றுடன் பிரிக்ஸ் வங்கிக்கு நல்ல உறவு உள்ளது. அவர்கள் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள் என்றார்.
புதிய மேம்பாட்டு வங்கி அல்லது பிரிக்ஸ் வங்கி தொடங் குவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே மற்ற சர்வதேச நிதி அமைப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்டது.