

புதிய வங்கிகளுக்கான அனுமதி முதல் கட்டமாக ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். இதன் மூலம் தற்போது நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மூலம் 12 தனியார் வங்கிகளுக்கு மேல் இந்தியாவில் இயங்க உள்ளது..
ஆகஸ்ட் மாதம் குறைந்தபட்சம் முதல் கட்டமாக லைசென்ஸ்கள் வழங்க வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று நிதிக் கொள்கை அறிவிப்பு கூட்டத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்கள் அடிப்படையில் புதிய வங்கிகள் தொடங்க 26 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. இதில் டாடா சன்ஸ் மற்றும் வீடியோகான் இரண்டு நிறுவனங்களும் தங்களது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொண்டன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான கமிட்டி கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளது. இதில் 24 விண்ணப்பங்களை ஏற்று அந்த நிறுவனங்களுக்கு லைசென்ஸ் அளிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.