ஐ.ஆர்.பி.க்கு ரூ.2300 கோடி ஒப்பந்தம்

ஐ.ஆர்.பி.க்கு ரூ.2300 கோடி ஒப்பந்தம்
Updated on
1 min read

ஐ.ஆர்.பி. இன்ஃபிரா நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமிருந்து 2,300 கோடி ரூபாய் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி ஹரியாணா மாநிலத்தில் 166 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகளை 910 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தையும் சேர்த்து, ஐ.ஆர்.பி நிறுவனத்தின் ஒப்பந்த மதிப்பு 10,600 கோடி ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த மூன்று நான்கு ஆண்டு களுக்கு செயல்திட்டம் இருக் கிறது என்று நிறுவனம் தெரிவித் திருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in