

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் இருப்பு கடந்த ஆண்டில் 10 சதவீதம் குறைந்து 182 கோடி சுவிஸ் ப்ராங்காக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.12,615 கோடியாகும். சுவிஸ் வங்கிகள் மற்றும் இந்திய அரசாங்க பாதுகாப்பு நடைமுறைகள் மாற்றப் பட்டதால் இது குறைந்துள்ளது.
இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் இருப்பு வைப்பது 203 கோடி சுவிஸ் ப்ராங்க்லிருந்து 21 கோடி சுவிஸ் பிராங்க் குறைந்து 182 கோடி சுவிஸ் ப்ராங்குகளாக உள்ளது. நேற்று சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களில் இது தெரிய வந்துள்ளது. 2013க்கு பிறகு இந்தியர்களின் இருப்பு 2-வது முறையாக குறைந்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் வெளி நாட்டினர் இருப்பு வைப்பது எதிர்பாராத விதமாக 2014ல் 150 லட்சம் சுவிஸ் பிராங்க் (ரூ. 103 லட்சம் கோடிகளாக) ஆக அதிகரித்துள்ளது. இது 2013 இறுதி காலத்தில் மிகக் குறைந்த அளவாக ரூ. 90 லட்சம் கோடிகளாக இருந்தது.
2012ல் இந்தியர்கள் இருப்பு வைப்பது 3-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து ரூ.8,530 கோடியாக இருந்தது.