Published : 03 Jun 2015 11:05 AM
Last Updated : 03 Jun 2015 11:05 AM

மார்க் பார்க்கர் - இவரைத் தெரியுமா?

$ நைக் காலணி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 1979 ல் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சேர்ந்தவர். நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

$ காலணி விற்பனை பிரிவின் சர்வதேச துணைத் தலைவராகவும், நைக் பிராண்டுக்கான துணைத்தலைவராகவும் பணியாற்றுகிறார்.

$ நைக் காலணிகள் விற்பனையை அதிகரிப்பதில் இவரது பங்கு முக்கியமானது.

$ நியூயார்க்கில் பிறந்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 1977ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். விளையாட்டில் ஆர்வமுடையவர்.

$ 14 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

$ சமூக வலைதளங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த செயலிகளை உருவாக்குவதில் ஊக்கம் காட்டுபவர்.

$ பெண் விளையாட்டு வீரர்களுக்கு என தனியாக காலணிகளை தயாரிப்பதே எதிர்காலத்தின் பெரிய இலக்கு என்று கூறியுள்ளார்.

$ விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வது இவருக்கு பிடித்தமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x