Published : 24 Jun 2015 10:03 AM
Last Updated : 24 Jun 2015 10:03 AM

மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 27,000 ரூபாய்க்கு கீழே விற்பனையாகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 50 ரூபாய் விலை குறைந்து 10 கிராம் தங்கம் 26,950 ரூபாக்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் சரிவு இருந்தாலும் நேற்று சிறிதளவு உயர்ந்தது.

நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1179 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தவிர முதலீட்டாளர்களின் கவனம் பங்குச்சந்தை நோக்கி திரும்பியதால் தங்க சந்தைக்கு வரும் முதலீடு குறைந் துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 2,523 க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் 20,184 ரூபாக்கு விற்பனையானது. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 20,320 ரூபாயாக இருந்தது.

நேற்று 134 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் கடந்த வாரத்தில் அதிக பட்சமாக 20,440 ரூபாய்க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x