

இணையதள சமவாய்ப்பு குறித்த அரசின் நிலைப்பாடு அடங்கிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யத்தின் (டிராய்) அறிக்கையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இணையதள சம வாய்ப்பு (நெட் நியூட்ராலிட்டி) விவகாரம் குறித்து ஆராய ஒரு குழுவை தொலைத் தொடர்புத்துறை அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை இம்மாத தொடக்கத்தில் அமைச்சகத்திடம் அளித்தது.
இணையதள சம வாய்ப்பு என்பது, இணையதள பயன்பாட் டில் (டிராபிக்) எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பணம் அளிப்பதற்கேற்ப முன்னுரிமை அளிக்கக் கூடாது என்பதாகும். இந்தப் பிரச்சினை குறித்து ஆராயவும், இதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் ஓடிடி சேவை எனப்படும் வாட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகளுக்கு விதிமுறைகளை வகுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. இது தொடர்பாக 10 லட்சம் விமர்சனங்கள் பொதுமக்களிடமிருந்து டிராய்-க்கு வந்துள்ளன.