Published : 19 Jun 2015 10:21 AM
Last Updated : 19 Jun 2015 10:21 AM
பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் நம் பயணத்துக்கு ஒரு ஓசி கார் கிடைத்துவிட்டால் அதைவிட சந்தோஷம் என்ன இருக்கப்போகிறது. ஆனால் என்னிடம் இருக்கும் ஆடி ஏ 4 வெள்ளை நிற கார் என் மனதுக்கும், பயணத்துக்கும் இதமான கார்.
நீண்ட நாட்களாக டாப் திறந்த கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருந்தேன். இந்த ஆசை வருவதற்கு முன் இரண்டு ரேஸ் கார்கள் வாங்கி ஓட்டிப்பார்த்தவன் நான். டாப் திறந்த காரை தேடிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் பார்த்த வினாடியே பிடித்துப்போன கார்தான் ஆடி ஏ-4.
இதை வாங்கியே ஆக வேண்டும் என்று தேடிய போது நம் நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று தேடிப்பிடித்து விலையை கேட்டபோது அசந்து போனேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விலையை மட்டுமே விசாரித்தேன்.
இன்றைக்கு ஆடி கார் புதிய மாடல்களில் வந்துகொண்டே இருந்தாலும், எனக்கு என் கார் உயிர். எங்கே போக வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அதுவாக என்னை அழைத்துப்போகும். வண்ணங்களில் ஸ்டீல் க்ரே நிறம் அதிகம் பிடித்தாலும், அது என்னவோ வெள்ளை நிறமும் மனதை கொத்திச் செல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT