

மல்டிபிளெக்ஸ் துறையில் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் டிஎல்எப் நிறுவனத்தின் டிடி சினிமா நிறுவனத்தை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
நேற்று நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பிஎஸ்இக்கு கொடுத்த அறிக்கையில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் தெரிவித் திருக்கிறது.
டிஎல்எப் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிடி சினிமாஸ் நிறுவனத்துக்கு 6000 நபர்கள் அமரக்கூடிய 29 திரையரங்குகள் உள்ளன. பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துக்கு 43 நகரங்களில் 469 திரையரங்குகள் உள்ளன.
கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் இரு நிறுவனங்களுக்கு இடையே முறிவு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடங்களாக மல்டிபிளெக்ஸ் துறையில் நிறுவனங்கள் இணைவது அதிகமாக நடந்து வருகிறது.
டிஎல்எப் நிறுவனத்துக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதால், ரியல் எஸ்டேட் தவிர்த்து இதர வியாபாரங்களை விற்க முடிவெடுத்தது.