இவரைத் தெரியுமா?- அர்விந்த் பனகாரியா

இவரைத் தெரியுமா?- அர்விந்த் பனகாரியா
Updated on
1 min read

நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர். ஜனவரி 2015லிருந்து இந்த பொறுப்பை வகிக்கிறார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர். ஆசிய மேம்பாட்டு வங்கியின் தலைமை பொருளாதார அறிஞராக இருந்தார்.

உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஐக்கிய நாடுகள் சபையில் வர்த்தக மேம்பாடு சார்ந்த பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதார பட்டம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

2008 ல் இந்திய பொருளாதாரம் குறித்து இவர் எழுதிய India: The Emerging Giant என்கிற நூலை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டது. The Economics of Preferential Trade Agreements, மற்றும் Lectures on International Trade போன்ற முக்கிய நூல்களும் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in