விழிப்புணர்வு மூலம் நிதி மோசடிகளை தடுக்கலாம்

விழிப்புணர்வு மூலம் நிதி மோசடிகளை தடுக்கலாம்
Updated on
1 min read

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் நிதி மோசடிகளைத் தடுக்க முடியும் என்று பங்கு பரிவர்த்தனை மையத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா கூறினார். அதிக கமிஷனுக்காக ஏஜென்டுகள் மக்களை தவறான நிதி நிறுவனங் களில் முதலீடு செய்யத் தூண்டு கின்றனர். கடைசியில் மக்கள் மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து நஷ்டமடைகின்றனர்

இதைத் தடுக்க வேண்டுமெனில் மக்களிடையே நிதி முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சின்ஹா கூறினார். பனாரஸ் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் மற்றும் வர்த்தக பிரிவு தொடக்கத்தின் 75-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் மேலும் கூறியது: இந்த பல்கலைக் கழகத்தில் முதலீட்டாளர் விழிப்புணர்வு மையத்தை ஏற்படுத்தலாம் என்றும் சின்ஹா பரிந்துரைத்தார்.

நிதி மோசடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த 15 மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தவிர செபி-யும் 14 மொழிகளில் 24 மணி நேர தொலைபேசி சேவை அளிக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடியும். கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் பலனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய பங்குச் சந்தை சாதா ரண மக்களிடமிருந்து அதிகம் விலகியிருக்கிறது. தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் அதிக அளவிலான மக்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும் என்று பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜி.சி. திரிபாதி கூறினார்.

முதலீட்டாளர்களிடையே ஒரு சீரான முதலீட்டு ஆலோசனையை வகுப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்று தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in