Last Updated : 25 Jun, 2015 10:06 AM

 

Published : 25 Jun 2015 10:06 AM
Last Updated : 25 Jun 2015 10:06 AM

மொபைல் செயலி: ஸ்பைஸ்ஜெட் அறிமுகம்

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நேற்று மொபைல் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு, விமான பயண விவரங்கள், நிறுவனம் அளிக்கும் சலுகை விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். வாடிக்கை யாளர்கள் கட்டண விவரங்கள் மற்றும் பயணத்தை ரத்து செய்வது ரீபண்ட் விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்று ஸ்பைஸ் ஜெட் செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x