

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தோடு, அவர்களுக்கு கடன் வழங்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முடிவு செய்துள்ளது.
சிறு விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் ஆன்லைன் விற்பனை சந்தை முறையை மேலும் பிரபலமடைய செய்யவும், இந்த வருட இறுதிக்குள் சிறு மற்றும் புதிய விற்பனையாளர்களுக்கு கடன் வழங்க பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் திட்டமிட்டு வருகிறது.
தற்போது இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் வழிமுறையில் உள்ளது. அடுத்தகட்டமாக கனடா, சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் விற்பனையாளர்களுக்கு கடன் வழங்கும் வழிமுறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை விற்பனையாளர்களின் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.