பொருளாதாரம் குறித்து எதிர்மறை சூழல் நிலவுகிறது: ஹெச்டிஎப்சியின் ஆதித்யா பூரி கருத்து

பொருளாதாரம் குறித்து எதிர்மறை சூழல் நிலவுகிறது: ஹெச்டிஎப்சியின் ஆதித்யா பூரி கருத்து
Updated on
1 min read

இந்திய பொருளாதாரம் குறித்து தேவையற்ற எதிர்மறை சூழல் நிலவுகிறது. மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு போதுமான காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: தொழில் செய்வதற்கான சூழ்நிலை மேம்பட்டுவருகிறது. தொழில் துறையினர் அரசு குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.

ஆனால் உண்மையை மாற்ற முடியாது. நான் உண்மையான தகவல்களின் அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் பேசவில்லை. வாகனங்களுக்கு தேவை உருவாகி இருக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்திருக்கிறது.

தேங்கி இருக்கும் திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, ஜிஎஸ்டி மற்றும் நிலம் கையகப்படுத்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் நீண்ட கால நோக்கில் இந்தியா மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஹெச்டிஎப்சி வங்கி பற்றி பேசிய ஆதித்யா பூரி, “நிகரலாபம் குறைந்ததற்கு பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணமே தவிர மற்ற எதுவும் இல்லை.

தென் இந்தியாவை சேர்ந்த தனியார் வங்கிகளை இணைப் பதாக அவ்வப்போது வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. மற்ற வங்கிகளை இணைப்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

ஆனால் இப்போ தைக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை” என்றார். 2014-15-ம் நிதி ஆண்டில் வங்கியின் நிகரலாபம் முதல் முறையாக ரூ.10,000 கோடியை தாண்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in