

தனியார் வங்கியான யெஸ் வங்கி ரூ16,400 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலும் கிடைத்து விட்டது.
ரூ.6,400 கோடி பங்குகள் மூலமாகவும், ரூ.10,000 கோடியை கடன் பத்திரங்கள் மூலமாக திரட்ட யெஸ் வங்கி முடிவு செய்திருக்கிறது.
மேலும் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ரானா கபூரின் மறு நியமனத்துக்கும் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். 99.97% பங்குதாரர்கள் அவரது நியமனத்தை ஆதரித்துள்ளனர்.
அவர் மூன்று வருடங்களுக்கு இந்த பதவியில் இருப்பார். அதேபோல வங்கியின் கடன் வாங்கும் எல்லையையும் பங்குதாரர் குழு ரூ.50,000 கோடியாக உயர்த்தி இருக்கிறது.