

ஏப்ரல் மாத தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 4.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. சந்தை எதிர் பார்த்ததை விடவும் தொழில் உற்பத்திக் குறியீடு உயர்ந்தி ருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 2.5 சதவீதமாக இருந் தது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.7 சதவீதமாக ஐஐபி இருந்தது.
இந்த குறியீட்டில் 75 சதவீத பங்கு வகிக்கும் உற்பத்தி துறை யின் வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது. கேபிடல் குட்ஸ் வளர்ச்சியும் 11.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த 2014-15 நிதி ஆண்டில் 2.1 சதவீத மாக இருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் மைனஸ் 0.1 சதவீத மாக இருந்தது.
ஐஐபி குறியீடு சிறப்பாக இருந் தாலும் பணவீக்கம் சந்தை எதிர் பார்த்த நிலையிலே இருக்கிறது. மே மாத சில்லரை பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 4.87 சதவீத மாக இருந்தது. அதேசமயம் உணவுப்பணவீக்கம் 4.8 சதவீத மாக இருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 5.11 சதவீத மாக இருந்தது.