Published : 19 Jun 2015 10:14 AM
Last Updated : 19 Jun 2015 10:14 AM

விரைவில் சந்தைக்கு வருகிறது எய்டர் மோட்டார் சைக்கிள்

இரு சக்கர வாகன உலகில் முதல் முறையாக தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது ஹைதராபாதைச் சேர்ந்த நிர்வனா குழுமம். இந்நிறுவனம் டிஸ்போசபிள் சிரிஞ்ச், கிரம் பவுடர், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இக்குழும நிறுவனத் தலைவர் ஷிவ் குமாருக்கு இருசக்கர வாகனங்கள் மீதான தீராத ஈடுபாடு காரணமாக இத்துறையில் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ. 2 ஆயிரம் கோடி முதலீட்டில் 4 இடங்களில் ஆலை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது தமிழகத்தில் கோயம்புத்தூரிலும், மகாராஷ்டிர மாநிலம் புணேயிலும், டெல்லியை அடுத்த குர்காவ்னிலும், அகமதா பாத்திலும் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எய்டர் மோட்டார்ஸ் என்ற பெயரில் இந்நிறுவனத் தயாரிப் புகள் விரைவிலேயே சந்தைக்கு வர உள்ளன.

இந்நிறுவனம் 110 சிசி திறனில் ஸ்டோயிக் என்ற பெயரில் மோட்டார் சைக்கிளை அறிமுகப் படுத்த உள்ளது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 110 கி.மீ. தூரம் ஓடக் கூடியதாம்.

முதல் கட்டமாக இந்நிறுவனம் 5 மாடல்களில் மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஸ்கூட்டரையும் அறிமுகப் படுத்துகிறது. இவை அனைத்தும் 110 சிசி முதல் 250 சிசி திறன் கொண்டவையாக இருக்கும். இவற்றின் விலை ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையாகும்.

வாகன உதிரி பாகங்கள் கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விற்பனையாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மூன்று மாதங்களில் தங்கள் தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத் தலைவர் ஷிவ் குமார் தெரிவித்துள்ளார்.

தங்கள் தயாரிப்புக்கு இதுவரை 35 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளதாக அவர் பெருமைபட தெரிவிக்கிறார்.

இந்த மோட்டார் சைக்கி ளுக்கான இன்ஜின் சீனாவிலுள்ள லோன்சின் ஆலையில் தயாரிக் கப்படுகிறது. இதற்கான தொழில் நுட்பத்தை ஜப்பான் நிறுவனம் அளித்துள்ளது. வாகனத்துக்கான வடிவமைப்பை சீனாவின் சுமித் மோட்டார் கம்பெனி மேற் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான ஹூடியைப் போன்று இவை இருக்கும். இத்தாலி மற்றும் மெக்சிகோவில் மிகவும் பிரபலமான வடிவமைப்பைக் கொண்ட மோட்டார் சைக்கிள் களைப் போன்ற வடிவமைப்போடு இந்நிறுவனத் தயாரிப்புகள் வெளி வர உள்ளன.

250 விற்பனையகங்களை பிரான்சைஸி முறையில் நியமிக்கவும் இந்நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. 110 விற்பனை யகங்கள் நிறுவன விற்பனை யகங்களாக செயல்படும். நாடு முழுவதும் 1,800 அங்கீகரிக் கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய பழுது நீக்கும் மையங்களை ஏற்படுத்த நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

இந்நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.

இத்தகைய வாகனங்களின் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x