Published : 06 Jun 2015 09:53 AM
Last Updated : 06 Jun 2015 09:53 AM

இவரைத் தெரியுமா?- நிதி அகர்வால் காஷ்யப்

கார்யா லைப் ஸ்டைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

பெண்களுக்கான ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தை 2013 செப்டம்பரில் தொடங்கினார்.

ஹனிவெல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தொழில் உத்திகள், விற்பனை மேம்பாடு மற்றும் சந்தைப் பிரிவு இயக்குநராக பணியாற்றினார்.

பெய்ன் அண்ட் கம்பெனியில் உத்தி வகுக்கும் பிரிவு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

வணிகவியல் மற்றும் பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றவர். கெல்லாக் நிர்வாகவியல் மையத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார்.

உத்திகள் வகுப்பது, புதிய தொழில்நுட்ப சந்தை மற்றும் நிதியியலில் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

எந்த வேலையிலும் அரை மனதோடு ஈடுபடக்கூடாது. தொழில்முனைவோருக்கு 24/7 மணிநேரமும் வேலை நேரம்தான் என்பார். இவரது நிறுவனத்தில் ரத்தன் டாடா சமீபத்தில் முதலீடு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x