Published : 09 Jun 2015 10:07 AM
Last Updated : 09 Jun 2015 10:07 AM

இவரைத் தெரியுமா?- கெனிச்சி அயூகவா

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஏப்ரல் 2013-லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

1980-ல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உலக அளவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முதன்மை மேலாளர், நிர்வாக செயல் அதிகாரி மற்றும் உலகளாவிய சந்தை உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

சுஸூகி நியூசிலாந்து நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாகிஸ்தான் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் இயக்குநராக 2004 முதல் 2008 வரை பணியாற்றியவர்.

ஜனவரி 2014 லிருந்து டென்சோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

2013 லிருந்து ஆஷி இந்தியா கிளாஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகவும் சுப்ரோஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரதிநிதியாகவும் பொறுப்பில் இருக்கிறார்.

ஜப்பான் ஒசாகா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x