

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்தியக் குழுவினர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவை (எஸ்பிஐஇஎப்) மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இம்மாதம் 18-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இம்மாநாடு நடைபெற உள்ளது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ரஷ்ய-இந்தியா வர்த்தக வட்ட மேஜை மாநாட்டில் நிர்மலா சீதாராமன் உரையாற்ற உள்ளார் இந்தக் கூட்டத்தில் ரஷ்ய சம்மேளனத்தின் தலைவரும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சருமான அலெக்ஸி உலியுகேவ் உரை நிகழ்த்துகிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற் பதற்கான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் அடங்கிய குழுவை சிஐஐ அனுப்புகிறது. இக்குழுவில் சிஐஐ தலைவர் சுமித் மஜும்தார், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இக்குழுவினர் பி 20 துருக்கி பிராந்திய ஆலோசனைக் குழுவினருடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரஷ்யாவில் இந்தியாவின் ஒட்டுமொத்த முதலீடு 800 கோடி டாலராகும். எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரஷியா மூலம் இந்தியாவில் 400 கோடி டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் கட்டமைப்பு உள்ளிட்ட துறை களில் முதலீடு செய்ய உள்ளது.
ரஷ்ய நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு திட்டங்களில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இந்த கூட்டம் உதவும் என்று சிஐஐ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.