Published : 13 Jun 2015 10:03 AM
Last Updated : 13 Jun 2015 10:03 AM

இவரைத் தெரியுமா?- புஜித் அகர்வால்

உயர் ரக சொகுசு வீடுகளைக் கட்டும் ஆர்பிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2006 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

ரீடெவலப்மெண்ட் துறையில் லாப நோக்கம் இல்லாமல் பயிற்சி களை அளிக்கும் பிராப்பர்டி ரீடெவலப்பர்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தொடர்பு அதிகாரியாகவும் இருக்கிறார்.

2008 லிருந்து ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகள் இல்லாத இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

வணிகவியல் பட்டம் பெற்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் பள்ளி மற்றும் டிசைன் பள்ளியில் அட்வான்ஸ்டு மேனேஜ்மெண்ட் அண்ட் டிசைன் ப்ரோகிராம் பட்டமும் பெற்றவர்.

16 வயதிலேயே இந்த தொழிலில் கவனம் செலுத்த தொடங்கியவர். கிரைஸில், கிரடாய் மற்றும் ரியாலிட்டி பிளஸின் விருதுகள் உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.

வேலை பார்க்கும் இடத்தின் கலாசாரமும், சூழலும் ஒப்பற்ற திறமைகளை வெளிக்கொண்டுவரும் என்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x