

மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டும், பொருளாதாரத்துக்கு இதுதான் தேவை என்று அசோசேம் தெரிவித்துள்ளது.
ஸ்திரமான அரசு அமையும் போது, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும், முதலீட்டுக்கான சூழ்நிலையை உருவாக்க முடியும், உற்பத்தியை அதிகரித்து வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.
தொழில் உற்பத்திக் குறியீடு தொடர்ந்து எதிர்மறையாக இருப்பது குறித்து கேட்டதற்கு, தொடர்ந்து சந்தையில் பொருள்களின் தேவை குறைந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ராணா கபூர் கூறினார். 2013-14-ம் ஆண்டுக்கான தொழில் உற்பத்திக் குறியீடு 0.1 சதவீதம் சரிந்தது. அதேபோல மார்ச் மாதம் ஐ.ஐ.பி.குறியீடு 0.5 சதவீதம் எதிர்மறையாக முடிந்தது.