

ஸ்விஸ் வங்கிகளில் வெளி நாட்டினர் வைத்திருக்கும் தொகையில் இந்தியாவின் பங்கு 0.123 சதவீதம் மட்டுமே. ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டினர் வைத்திருக்கும் தொகை அடிப்படையாக பார்க்கும்போது 61-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்போர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தும், இரண்டாம் இடத்தில் அமெரிக் காவும் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 73-வது இடத்தில் உள்ளது. யூ.பி.எஸ் மற்றும் கிரெட் சூஸ் ஆகிய இரண்டு வங்கிகள் வெளிநாட்டு நிதியில் மூன்றில் இரண்டு பங்கினை கையாளுகின்றன.
சமீபத்தில் ஸ்விஸ் தேசிய வங்கி 2014-ம் ஆண்டு தகவல் களை அதிகாரபூர்வமாக வெளி யிட்டது.
இதில் இந்தியர்களின் பணம் 10 சதவீதம் சரிந்து ரூ.12,615 கோடியாக உள்ளன. ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு முதலீடு களில் இந்த தொகை 0.123 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் பெரியதாக விவாதிக்கப்பட்ட கருப்பு பணத்தின் அளவுக்கும் ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்ட தகவலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வங்கி வெளியிட்ட தகவலில் நிறுவனங்கள் வைத் திருக்கும் கணக்குகள் வெளி யிடப்படவில்லை.
இந்தியர்கள் வைத்துள்ள தொகை யூபிஎஸ் மற்றும் கிரெடிட் சூஸ் ஆகிய பெரிய வங்கிகளில் பெருமளவு உள்ளது. 2014-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி ஸ்விஸ் நாட்டில் 275 வங்கிகள் இருந்தாலும், யூபிஎஸ் மற்றும் கிரெடிட் சூஸ் ஆகிய வங்கிகள் மட்டுமே பெரிய வங்கிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்த வெளிநாட்டு நிதியில் இங்கிலாந்தின் பங்கு 22 சதவீதமாக உள்ளது.
இங்கிலாந்து அமெரிக் காவுக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகள், ஜெர்மனி, பஹாமாஸ், லக்சம்பர்க், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.