கூடுதலாக செலுத்தப்பட்ட வரி வங்கியில் வரவு வைக்கப்படும்: மத்திய நேரடி வரி ஆணையம் தகவல்

கூடுதலாக செலுத்தப்பட்ட வரி வங்கியில் வரவு வைக்கப்படும்: மத்திய நேரடி வரி ஆணையம் தகவல்
Updated on
1 min read

கூடுதலாக செலுத்தப்பட்ட வரி, வரிசெலுத்துபவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என மத்திய நேரடி வரி அணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் வருமான வரி செலுத்து பவர்களின் ரீபண்ட் தொகைகள், இனி அவர்களது தனிநபர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரி செலுத்துபவர்களின் பணம் பாதுகாப்பாக அவர்களுக்கு சேரும். மேலும் அரசின் இந்த முடிவு வரி செலுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று கூறியுள்ளது.

வருமான வரித்துறையின் அனைத்து செயல்களையும் வங்கிச் சேவையோடு இணைக்கும் விதமாக திட்டமிடப் பட்டு வருகிறது. தற்போதைய முறையில் ரூ.50,000த்துக்கும் மேற்பட்ட வரி திருப்பங்களை காசோலையாக அளிக்கப்படு கிறது. இது அஞ்சல்துறை மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் அனிதா கபூர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த புதிய திட்டத்தை குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை கொடுத்து வேலை நடந்து வருகிறது. வரிசெலுத்துபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் இந்த வகையிலான பரிமாற்றம் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்றவர், வரி செலுத்து பவர்களில் பலர் தவறான வங்கிக் கணக்கு அளிக்கின்றனர்.

நாங்கள் அந்த வங்கிக் கணக்கிற்கு ரீபண்ட்களை அனுப்பும் போது கணக்கு மற்றும் பெயர்கள் பொருந்துவதில்லை. பெரு வாரி யான வரி செலுத்துபவர்கள் இதை செய்கின்றனர். வரி செலுத்துபவர்கள் இதை மாற்ற வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in