

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அருண்ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த எஸ்.கே. ஜெயின் ஊழல் வழக்கு தொடர்பாக 9 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதற்குப் பின் தலைமைப் பொறுப் புக்கு எவரும் நியமிக்கப்பட வில்லை.
சில நிறுவனங்களுக்கு கடன் வரம்பை அதிகரிப்பதற்காக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டி சிபிஐ அதிகாரிகள் எஸ்.கே. ஜெயினை கைது செய்தனர். பூஷண் ஸ்டீல் நிறுவனத்துக்கு விதிகளுக்குப் புறம்பாக கடன் அளவை அதிகரித்ததாகவும் ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார் அருண்ஸ்ரீவாஸ்தவா, புதிய பதவிக்கு அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஓய்வு பெறும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது.