Published : 06 May 2015 09:58 AM
Last Updated : 06 May 2015 09:58 AM

இவரைத் தெரியுமா?- சுக் ராபின்ஸ்

நெட்வொர்க்கிங் நிறுவனமான சிஸ்கோ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி. ஜூலை மாதம் இப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

நிறுவன செயல் தலைவர் மற்றும் நிறுவன இயக்குநர் குழுவின் தலைவராகவும் இருப்பார்.

1997ல் இந்நிறுவனத்தில் சேர்ந்த இவர், உலக அளவில் செயல்பாடுகளுக்கான முதன்மை துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வணிக ரீதியான விற்பனையை அதிகரித்தது மற்றும் கையகப்படுத்துதல்களில் முக்கிய பங்காற்றியவர். உலக அளவிலான விற்பனை ஒருங்கிணைப்பு மற்றும் துணை நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் வல்லுனர்.

இதற்கு முன்பு பே நெட்வொர்க்ஸ் மற்றும் அசெண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இந்தத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். எம்எஸ் சொசைட்டி ஆப் நார்தன் கலிபோர்னியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் கணக்கு மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்.

தொழில்நுட்பத் துறையின் மரியாதைக்குரிய தலைவராகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்றும் தொழில்நுட்ப துறையினரால் அழைக்கப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x