ஒரு வருட மோடி ஆட்சியில் பெரிய முதலீடுகள் இல்லை: இந்திய தொழிலக கூட்டமைப்பு தகவல்

ஒரு வருட மோடி ஆட்சியில் பெரிய முதலீடுகள் இல்லை: இந்திய தொழிலக கூட்டமைப்பு தகவல்
Updated on
1 min read

பாஜக தலைமையிலான ஆட்சி யின் ஒரு வருட கொண்டாட் டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் பெரிய முதலீடுகள் ஏதும் இல்லை என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.

முதலீடுகள் இப்போது வரத்தொடங்கி இருந்தாலும், பெரிய முதலீடுகள் இல்லை, அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் சுமித் மஜும்தார் தெரிவித்தார்.

‘அரசாங்கம் சீரான வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அடிப்படையில் இருக்கும் பிரச்சி னைகளை களைந்தால் மட்டுமே, வளர்ச்சி அடுத்தகட்டத்துக்கு செல்லும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. தொழில்துறை நண்பர் களுடன் இதுகுறித்து விவாதித் திருக்கிறேன். அதன் அடிப் படையில் பார்க்கும் போது தற்போதைய நடவடிக்கைகளுக்கு நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் தான் முடிவுகள் கிடைக்கும் என்று நம்புவதாக’ சுமித் மஜூம்தார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது “தொழிலில் சிவப்பு நாடாக்களை ஒழித்து, தொழில் புரிவதற்கு எளிமை யான, சாதகமான சூழலை உருவாக்கவேண்டும். தொழிலுக்கான சாதகமான நிலை மட்டுமல்லாமல் விண்ணப்பங்கள், அனுமதி உள்ளிட்ட பல விஷயங் களிலும் வேகமான மாற்றம் தேவை.

தொழில் புரிவதற்கான சூழல் இங்கு உருவாகாத போது பெரிய முதலீடுகளை நாம் எதிர்பார்க்க முடியாது. முதலீட்டாளர்கள், குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களிடையே ஒருவிதமான தயக்கம் உள்ளது. இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீட்டாளர்கள் 3 முதல் 4 ஆண்டுகள் வரை முயற்சி செய்கிறார்கள், அதன் பிறகு திரும்பி சென்றுவிடுகிறார்கள்.

இப்போது எடுத்துவரும் நடவடிக்கைக்கு இன்னும் நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் பலன் கிடைக்கும் என்றார்.

கடந்த 4-5 வருடங்களில் எந்த பெரிய முதலீடும் இந்தியாவுக்கு வரவில்லை. இதற்கு அதிக வட்டி விகிதம் காரணமாக இருந்தாலும், நம்பிக்கை இல்லாததும் காரணம் ஆகும், அந்நிய முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் உள்நாட்டு முதலீட்டாளர்களும் கடந்த சில வருடங்களாக நம்பிக்கை இழந்திருந்தார்கள்” என்றார்.

சீர்திருத்தம் தேவை

அடுத்த சில மாதங்களில் முக்கிய சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதாக அசோசேம் அமைப்பு தெரிவித்திருக்கிறது. மோடி அரசின் ஓர் ஆண்டு முடிவடைந்த நிலையில் சாலை, மின்சாரம், நிலக்கரி உள்ளிட்ட முக்கிய துறைகளில் சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதாக அசோசேம் தெரிவித்துள்ளது.

இதுதவிர இந்தியாவில் ரியல் எஸ்டேட், வீடு, வங்கி மற்றும் டெலிகாம் உள்ளிட்ட துறைகள் மிகுந்த பிரச்சினையில் உள்ளன. சர்வதேச அளவில் தேவை குறைந்ததன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அசோசேம் அமைப்பின் தலைவர் ரானா கபூர் தெரிவித்தார்.

சில புதுமையான முயற்சிகள் வரவேற்கத்தக்கது. வீடுகளில் இருக்கும் தங்கத்தை வெளியே கொண்டுவரும் திட்டத்தால், தங்கத்தின் இறக்குமதி தேவை குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை குறையும். அதேபோல ஜிஎஸ்டி சட்டமாக மாறும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in