Published : 28 May 2015 09:54 AM
Last Updated : 28 May 2015 09:54 AM

அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அடுத்தவாரம் (ஜூன் 2) ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை வெளியிட உள்ளது. இந்நிலையில் இருவரது சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாக இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் கூறினார்.

வட்டிக் குறைப்பு இருக்குமா என்று ஜேட்லியிடம் செய்தியா ளர்கள் கேட்டதற்கு, எனது கருத்து வெளிப்படையானது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ள நிலையில் வட்டிக் குறைப்பு செய்யலாம் என்றார். பணவீக்கம் கட்டுக்குள் உள்ள நிலையில் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குறிப்பாக தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைமை பொரு ளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் கூட வட்டிக் குறைப்பு அவசியம் என்று சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் பேசுகையில் ஜேட்லி கூட வட்டிக் குறைப்பை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக பணவீக்க நிலைமை, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விஷயங்களை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளும்.

கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி அரை சதவீதம் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுத்தது. இதனால் வட்டி 7.5 சதவீதமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x