

பெங்களூருவைத் தலைமை யகமாகக் கொண்டு செயல்படும் காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அடுத்த மாதம்ஐபிஒ வெளியிட திட்டமிட் டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரூ.1,150 கோடி ரூபாய் திரட்ட காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரி கிறது.
தற்போது திரட்டப்பட் டிருக்கும் தொகையில் பெரும் பாலானவற்றை கடனைதிருப்பி செலுத்தவும், பகுதி தொகையை புதிய கடைகள் திறக்கவும் பயன்படுத்தும் என்று தெரிகிறது.
பொதுவாக ஐபிஓ வெளி யாகும் போது பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது பெரும் பாலான பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் வெளியேற மாட்டார்கள் என்றே தெரிகிறது. 750 கோடி ரூபாய் தொகையை கடனை அடைக்கவும், 290 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்த போவதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் முதலீடு செய்திருக்கிறார்கள். தவிர கே.கே.ஆர் இந்தியா அட்வைசர்ஸ், ஸ்டாண்டர்டு சார்டட் பிரைவேட் ஈக்விட்டி உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன.