

விண்டோஸ் 10 இயங்குதளம் விரைவில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் செயலிகள் இந்த இயங்குதளத்தில் இயங்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.
மென்பொருள் துறையில் இது முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
செயலிகள் உருவாக்குபவர் கள் மாநாட்டில் மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா இவ்வாறு தெரிவித்தார். இன்று வாடிக்கையாளர்களின் தேவை மாறி வருகிறது. அவர் களுக்காக விண்டோஸ் 10 உருவாக்கபட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்தில் 14 லட்சம் செயலிகள் உள்ளன. ஆனால் விண்டோஸ் இயங்கு தளத்தில் சில ஆயிரம் செயலிகள் மட்டும் உள்ளன.
தற்போது விண்டோஸ் இயங்கு தளத்தின் முந்தைய மாடல்களை பயன்படுத்துபவர்கள், விரைவில் வெளியாக இருக்கும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக பதிவேற்றிகொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித் திருக்கிறது. இதன் மூலம் விண்டோஸ் 10 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வாய்ப்புகள் அதிகம்
முன்பு சாப்ட்வேர்கள் விற்பது கடினம், ஆனால் இப்போது கிளவுட் வந்த பிறகு விற்பனை எளிதாகிவிட்டது. இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்று சத்யா நாதெள்ளா மேலும் தெரிவித்தார்.