சென்னை ஆலையை விற்கும் முடிவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றது நோக்கியா

சென்னை ஆலையை விற்கும் முடிவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றது நோக்கியா
Updated on
1 min read

சென்னை நோக்கியா ஆலை யை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று அந்நிறுவனம் திரும்பப் பெற்றது.

இந்நிறுவனத்தை வாங்கு வதற்கு முன் வந்த நிறுவனம் அந்த முடிவை கைவிட்டதால் மனுவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பாதர் துரேஸ் அகமது மற்றும் சஞ்ஜீவ் சச்சதேவா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ரூ 10 ஆயிரம் கோடி வரி செலுத்த வேண்டும் என்பதால் ஆலையை விற்க அனுமதிக்கக் கூடாது என்று வருமான வரித்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செப்டம் பர் மாதம் 7-ம் தேதி எடுத்துக் கொள்வதாக இருந்தது.

இதனிடையே இந்த ஆலை யை வாங்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளதால் சொத்துகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 19-ம் தேதி நோக் கியா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இதனிடையே இந்த நிறுவனத் தின் சொத்துகளை மதிப்பீடு செய்ய யர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தை நீதிமன்றம் நியமித் திருந்தது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை யின்படி நிறுவனத்தின் சொத்து களின் மதிப்பு ரூ. 361 கோடி எனவும் மதிப்பீடு செய்திருந்தது.

நோக்கியா நிறுவனத்தை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள ஆலைகள் மைக்ரோசாப்ட் வசம் வந்த போதிலும் சென்னை ஆலையை அந்நிறுவனம் தனது பட்டியலில் சேர்க்கவில்லை. வரி பாக்கிக்காக இந்நிறுவனத்தின் சொத்துகளை முடக்க நீதிமன் றத்தில் வருமான வரித்துறை மனு செய்தது.

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் தயாரிப் புக்கான ஆர்டரை சென்னை ஆலைக்கு வழங்குவதை நிறுத் தியது. இதையடுத்து இந்த ஆலையின் செயல்பாடுகள் முற்றி லுமாக நிறுத்தப்பட்டன.

2013-ம் ஆண்டு ஆலையின் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்தபட்சம் ரூ. 3,500 கோடி தொகையை அளிக்க நிறுவனம் முன்வந்தால் ஆலையின் சொத்துகளை விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இப்போது நிறுவனத்தை வாங்க முன்வந்த நிறுவனம் முடிவை திரும்பப் பெற்றதால், யர்னஸ்ட் யங் நிறுவனம் மதிப்பீடு செய்திருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு நிறுவன சொத்துகளை விற்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் யோசனை அளித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in