

போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய துணை நிறுவனமான ராட்லிங் ஆசியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை புல்லர்டன் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. 530 கோடி ரூபாய்க்கு தன்னுடைய துணை நிறுவனத்தை போர்டிஸ் விற்றது.
இந்த இணைப்பு வரும் 12-ம் தேதிக்குள் முடிவடையும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த இணைப்புக்கு ஆலோசனை நிறுவனங்களாக ஜே.பி மார்கன் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் மார்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டன.
எங்களுடைய சர்வதேச செயல்பாட்டினைக் குறைத்துக்கொண்டு இந்தியாவில் கவனம் செலுத்த விரும்புவதாக போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் செயல் தலைவர் மல்விந்தர் சிங் மற்றும் துணைத்தலைவர் ஷிவிந்தர் சிங் இருவரும் கூட்டாக தெரிவித்தார்கள்.
2010-11ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவமனைகளை வேகமாக போர்டிஸ் நிறுவனம் இணைத்து வந்தது. ஆனால் 2012-13-ம் நிதி ஆண்டில் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அதிகரித்தது. இப்போது போர்டிஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் இந்தியாவில் இருந்து தான் கிடைக்கிறது.