

ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திகேட்டு அவரைக் காணச் சென்றேன். உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மிகவும் சோர்வாக கவலையின் மொத்த உருவாக இருந்தார். விசாரித்த பொழுது அவர் அலுவலகத்தில் யாரும் எந்த வேலையையும் செய்யாமல் எல்லா வேலைகளையும் அவரிடமே கொடுத்துவிடுவதாக குறை கூறினார். உயர் பதவியில் இருக்கும் அவர் அவ்வாறு சொன்னது வேடிக்கையாக இருந்தது.
பணி பிரித்து அளிப்பது, பணி ஒப்படைப்பு போன்ற முறைகளை ஏன் கையாளவில்லை என்ற கேள்விக்கு யாரும் எதையும் சரியாக செய்வதில்லை என்ற பதில் ராக்கெட் வேகத்தில் வந்தது. மீண்டும் விசாரித்தபோது எந்த வேலையையும் தன்னால் மட்டுமே கச்சிதமாக செய்ய முடிகிறது என்றும் மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது அவர்களால் கச்சிதமாக செய்து முடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
அதன் பிறகு அவரிடம் இந்த கதை தொடர்ந்தால் அடுத்த முறை உங்களை சொர்க்கத்தில் வந்து தான் சந்திக்க முடியும். ஏனென்றால், கச்சிதமான வேலை எல்லோருக்கும் தெரியும் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறந்தால் வேறு வழியே கிடையாது.
மேற்கூறிய கருத்தை தான் DELEGATING WORK என்ற புத்தகத்தின் ஆசிரியர் குழு மிகத் தெளிவாக, மிக எளிதாக குறைந்த பக்கங்களில் நிறைந்த செய்திகளாக வாரித் தெளித்திருக்கிறார்கள்.
பணி ஒப்படைப்பு என்பது குறித்த நேரத்தில் குறித்த வகையில் குறித்த பணியை ஒருவருக்கு பதிலாக வேறொருவர் முழுமையான அதிகாரத்தோடு செயல்படுவது என்றால் மிகையாகாது. மேலாண்மையில் பணி ஒப்படைப்பு என்பது தவிர்க்க முடியாத செயல். மேலதிகாரிகள் பணி ஒப்படைப்பை தங்களது செல்வாக்கை குறைக்கும் உத்தி என்று புறம் தள்ளுகிறார்கள்.
கீழ் பணியாளர்களோ பணி சுமையாக கருதி தவிர்க்கிறார்கள். உண்மையில் பணி ஒப்படைப்பு என்பது மேலதிகாரிகள் அவர்களே எல்லா வேலைகளையும் செய்ய முடியாத நேரங்களில் மற்றவர்களிடம் பணியை பிரித்து அளிக்கிறார்கள். கீழ் பணியாளர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் தங்களை நுழைத்துக் கொள்வதால் பணியை முடிக்க முடிவ தில்லை அதே போல் பிணியை தவிர்க்க முடிவதில்லை.
பணியை ஒப்படைத்தால் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை சொல்வதை விட எவ்வாறு செய்கின்றார்கள் என மேற்பார்வையிடுவது தான் இன்றியமையாதது. பணி செய்து கொண்டே இருப்பவர்கள் பணியாளர்கள், பணியை ஒப்படைத்து மேற்பார்வயிட்டு செய்து முடிப்பவர்கள் தலைவர்கள். பெரும்பான்மையான மேலதிகாரிகள் பணியாளர்களாகவே இருப்பதால்தான் தலைமை பண்பு தகுதிகள் கானல் நீராகவே தெரிகின்றன. பணி ஒப்படைப்பால் மற்றவர்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கிறார்கள் என்ற பலனை அனுபவிக்க முடியும். இதன் மூலம் தனக்கும் தன் குழுவுக்கும் கற்றறிந்து வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டாகும். கருத்து கூறி கருத்துக் கேட்டு முடிவாக திறமையாகவும், பயனுள்ளதாகவும் பணிகளை முடிக்க இயலும்.
திறமையான பணியாளர்கள் பணி செய்யும் நேரத்தை சேமித்து பல பணியாளர்களையும் ஒருங்கிணைத்து பணி முடிக்கும் பொழுது பரவலான திறமைசாலிகள் உருவாகிறார்கள். திற மையான தலைவர் உருவாகிறார்.
ஏன் பணி ஒப்படைப்பு
மற்றவர்களை திறமையானவர் களாக உருவாக்கவும், நேரத்தை சேமிக்கவும், தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நிறுவன உற்பத்தி மேலோங்கவும், சக பணி யாளர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரவும் பணி ஒப்படைப்பு தேவை. திறமையான பணி ஒப்படைப் பால் நல்ல முறையில் நிர்வாகிக்கவும், அதிகாரத்தை விட்டுக் கொடுத்து தலைமை பண்புகளை ஏற்றுக்கொள் ளவும் முடியும். பணி ஒப்படைப்பு என்பது தனி நபர் வெகு மானம் அல்ல. மாறாக நிறுவன வளர்ச்சிக்கு ஊற்றுக்கண் ஆகும்.
நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உற்பத்தி தகவல்களை மேம்படுத்த முடியாது. அது போன்ற நேரங்களில் மேலதிகாரிகள் வாடிக்கையாளர்களிடமும், கீழ் அதிகாரிகள் அந்த வெற்றிடத்தில் மேலதிகரிகளின் பணிகளையும் முடிப்பது நிறுவன வளர்ச்சிக்கு தேவையானது.
பணி ஒப்படைப்பால் மேலதிகாரிக்கு நேரம், புதுமைக் கருத்துகள், நிம்மதி, எதிர்கால வளர்ச்சி செலவினங்களைக் குறைக்கும் முயற்சி, வரவுகளை அதி கரிக்கும் உத்தி ஆகியவை பற்றி ஆய்வு செய்ய முடியும். சக பணியாளர்களுக்கு திறமை மேம்பாடு, பணி ஊக்கம், மற்றவருடன் ஒத்துழைத்தல் பொறுப் பேற்று நடத்தல், மேலாண்மை செயல்பாட்டு திறன் வளர்த்தல் ஆகிய வகளைக் கற்றுக்கொள்ள முடியும். நிறுவனத்திற்கோ திறமையான பங்க ளிப்புள்ள பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாக வேலைகளை முடித்தல் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தல், மனம் திறந்த கருத்து பரிமாற்றம், அதிக லாபம் ஆகியன பயன்களாக கிடைக்கும்.
திறமையான பணி ஒப்படைப்பு
என்ன செய்ய வேண்டும் என்பதை முழுமையாகச் சொல்ல வேண்டும் கடினமான குழப்பமான வேலைகளை ஒப்படைக்கக் கூடாது மாறாக அவை களை பகுத்து எளிமையான சிறு சிறு வேலைகளாக மாற்றி மற்றவர்களிடம் அளிக்க வேண்டும். பணி ஒப்படைப்பு என்பது ஒரு கலை. எட்டி நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமே தவிர ஒட்டி சென்று வேலைகளை குழப்பக் கூடாது. பணியாளர்கள் அவர்க ளாகவே வேலைகளை செய்து முடிக் கும் பாங்கை ஏற்படுத்த வேண்டும். முடிவெடுக்கும் திறனும், இலக்கை அடையும் திறமையும் சரியான நபரை, நம்பிக்கையாக பணியாற்றுபவரை தேர்தெடுக்க உதவும். திறமை குறைந்த வர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி முறை யாக செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்யப் பணிக்க வேண்டும். பணி முன்னேற்றங்களுக்கு உதவ வேண்டும்.
பணி ஒப்படைப்பு ஒர் மறு ஆய்வு
ஒப்படைத்த பணி கூறுகள் சரிவர நிறைவேற்றபட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏற்பட்டுள்ள குறைகளை கருத்தில் கொண்டு அடுத்த முறை பணியை ஒப்படைக்கும் பொழுது அது நிகழா வண்ணம் பாத்துக்கொள்ள வேண்டும்.
# கொடுத்த பணி எவ்வாறு நிறை வேற்றப்பட்டது என்ற கருத்துக் கூறுதலை சேகரிக்க வேண்டும்.
# வெற்றிக்கரமாக செய்து முடித்த பணிகளை பாராட்டி அதற்கு அங்கீ காரம் அளிக்க வேண்டும்.
# முடித்த பணிகளை ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட காலக்கெடு வோடு ஒப்பிட்டு பார்த்து நன்மை தீமைகளை அலச வேண்டும்.
# குறை சொல்வதையும், அடுத்த வரின் பிரச்சினை என்பதையும் புறம் தள்ளி விட்டு, அடுத்து செய்ய போகும் பணி எவ்வாறு சிறப்பாக அமையும் என்று விவாதிக்க வேண்டும்.
# வளர்ந்து வரும் தலைமைப் பண்பு கள் கொண்ட நபர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.
# பணி ஒப்படைப்பு தவிர்க்கப்படு மானால் கீழ் பணியாளர்களுக்கு முன்னேற்றமும், தன்னம்பிக் கையும், வெற்றி மனப்பாங்கும் தள்ளுபடியாகிவிடும்.
# சிறிய செயல்களை எவ்வாறு துணிந்து செய்து முடிக்கின் றோம் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ் வாறு முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கு வித்தாகும்.
# எதை எப்படி ஒப்படைப்பது என்பது தான் பணிகளை வெற்றிக்கரமாக செய்து முடிப்பதற்கு காரணிகளாக உள்ளன.
# மொத்த பணியையும் காகித கற்றைகளோடு தூக்கி கொடுக் காமல் சிறு சிறு பணிகளை எவ்வாறு செய்து முடிப்பது என்பதை விவாதித்து நம்பிக்கை ஊட்டி அவைகளை வெற்றிக்கரமாக செயல்படுத்த வேண்டும்.
மேற்கூறிய வரிசைப்படுத்தப்பட்ட பணி ஒப்படைப்பு கருதுக்கோள்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ் வொரு நேரத்தில் தேவைப்படும். அலுவலகப் பணிகள் மட்டும் அல்லாமல் வீட்டில் பிள்ளைகளிடம் பணி ஒப்படைப்பு செய்வதும் இதில் அடங்கும். தன்னம்பிக்கையும், தலைமை பண்பும் பணிகளை ஒப்படைக்க உந்தும். மாறாக பயமும், நம்பிக்கையின்மையும் கீழ் பணியாளர்களிடம் ஏற்படுத்தும் சந்தேகங்களும் பணி ஒப்படைப்பை எட்டா கனியாக்கிவிடும். எட்டும் கனியை ஏந்திச் சுவைப்போம் வாரீர்.
- rvenkatapathy@rediffmail.com