

ஆசிய மேம்பாட்டு வங்கியின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் இன்று அஜர்பைஜான் செல்ல இருக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக நிதிச் செலயாளர் ராஜிவ் மெஹ் ரிஷி உள்ளிட்ட நிதித்துறை மூத்த அதிகாரிகள் ஏற்கெனவே அங்கு சென்றுவிட்டார்கள். ஆசிய மேம்பாட்டு வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் அஜர் பைஜான் தலைநகர் பா ஹு-வில் நான்கு நாட்கள் நடக்கிறது. இது ஆசிய மேம்பாட்டு வங்கியின் 48வது ஆண்டு பொதுக்கூட்டமாகும்.
இன்று சென்றாலும் மே மாதம் ஐந்தாம் தேதியே நாடு திரும்பிவிடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளு மன்றத்தில் நடக்க இருக்கும் ஜிஎஸ்டி, கருப்பு பணம் உள்ளிட்ட முக்கியமான பொருளாதார விவா தங்களில் கலந்து கொள்வதற்காக வருகிறார்.
மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. கட்டுமானம், கல்வி, சுற்றுச்சூழல், நிதி மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் இந்த வங்கி கவனம் செலுத்துகிறது. 1966-ம் ஆண்டு இந்த வங்கி தொடங்கப்பட்டது. 67 உறுப் பினர்கள் இந்த வங்கிக்கு இருக் கிறார்கள்