செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் நான்கு இந்திய பெண்கள்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் நான்கு இந்திய பெண்கள்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு
Updated on
1 min read

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கொச்சார், பயோகான் நிறுவ னத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா மற்றும் ஹெச்டி மீடியாவின் தலைவர் ஷோபனா பாட்டியா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி மற்றும் சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் பத்மஸ்ரீ வாரியர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க 100 பெண்களை பட்டியலிடுகிறது போர்ப்ஸ் பத்திரிகை.

இதில் அரசியல், தொழில் துறை, சமூக சேவை உள்ளிட்ட பிரிவுகளில் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிடுகிறது. தற்போது வெளியாகி இருக் கும் பட்டியல் 12-வது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹிலாரி கிளிண்டன் (2), மெலிண்டா கேட்ஸ் (3), அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன் (4), ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா (5), ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லெகார்ட் (6), பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் (7), பேஸ்புக் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் (8), யூடியூப் சி.இ.ஓ. சூசன் வொஜ்சிகி (9), அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷைல் ஒபாமா (10) ஆகியோர் பத்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

59 வயதாகும் அருந்ததி பட்டாச்சார்யா இந்த பட்டியலில் 30-வது இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் இவர் 36-வது இடத்தில் இருந்தார்.

சாந்தா கொச்சார் 35வது இடத்திலும், கிரண் மஜூம்தார் ஷா 85-வது இடத்திலும், புதிதாக பட்டியலில் நுழைந்திருக்கும் ஷோபனா பாட்டியா 93-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

சாந்தா கொச்சார் கடந்த வருடம் 43-வது இடத்தில் இருந்து இப்போது 35வது இடத்துக்கு முன்னேறி இருக் கிறார்.

கிரண் மஜூம்தார் ஷா 92வது இடத்தில் இருந்து இப்போது 85வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

பெப்சிகோ தலைவரான இந்திரா நூயி இந்த பட்டியல் ஆரம்பிக்கப்பட்ட வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருட மும் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார். 2004-ம் ஆண்டி லிருந்து செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட ஆரம்பித்தது.

சிஸ்கோ நிறுவனத்தின் பத்மஸ்ரீ வாரியார் கடந்த வருடம் 71-வது இடத்தில் இருந்து தற்போது 84-வது இடத்துக்கு சரிந்திருக்கிறார். இந்த பட்டியலில் அதிகபட்சமாக 59 அமெரிகர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in