Published : 07 May 2015 10:54 AM
Last Updated : 07 May 2015 10:54 AM

விரைவில் ஒரு கோடி பேட்டரிகள் தயாரிக்கும் புதிய ஆலை: அமரராஜா குழுமத் தலைவர் தகவல்

அமரராஜா குழுமம் ஒரு கோடிக்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி கள் தயாரிக்கும் ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை குழுமத் தலைவர் ராமச்சந்திர என் கல்லா தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம் சித்தூரில் புதிதாக ரூ. 750 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ள ஆலை தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர் மேலும் கூறியது.

இக்குழுமம் முதலில் தொழிற் சாலைகளுக்கான பேட்டரி தயாரிப்புகளில் ஈடுபட்டது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1985-ம் ஆண்டில் நிறுவனம் தொடங்கப்பட்டாலும் 1991-ம் ஆண்டிலிருந்து ஆட்டோமொபைல் துறைக்கான பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டது.

சர்வதேச அளவில் ஜான்சன் நிறுவனத்துக்கு மெக்சிகோ, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இந்நிறுவனம் கடைப்பிடிக்கும் அனைத்துவித நடைமுறைகள் அதாவது சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இந்தியாவில்தான் மாறுபட்ட தட்ப வெப்ப சூழல் நிலவுகிறது. காஷ்மீரில் கடும் குளிரும், ராஜஸ்தானில் கடும் வெப்பமும், நாட்டின் பிற பகுதிகளில் மாறுபட்ட தட்ப வெப்பமும் நிலவுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலான பேட்டரிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பொதுவாக பேட்டரிகளைப் பொறுத்தமட்டில் ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் மூலமாகத்தான் விற்பனை செய்ய முடியும். மாறாக மக்களிடம் முதலில் பொருளை விளம்பரப்படுத்தியதன் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எங்களது தயாரிப்புகளை தேர்வு செய்யத் தொடங்கின. இருப்பினும் அவர்களது தேர்வு, வாகன வடிவமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற வகையிலான பேட்டரிகள் தயாரிக்கப்பட்டது.

புதிதாக தொடங்கப்படும் ஆலையின் உற்பத்தியுடன் சேர்த்து மொத்தம் 1 .10 கோடி பேட்டிரிகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக நிறுவனம் விளங்குகிறது.

புதிய ஆலைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முதன் முதலில் ஆட்டோ மொபைல் பேட்டரிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு வாரண்டி அளிக் கும் நடைமுறையை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் அமரான் பேட்டரிகள் பிரபலமாகத் திகழ்கின்றன. இதேபோல யுபிஎஸ்களுக்கான பேட்டரிகளில் குவான்டாஸ் பேட்டரிகள் பிரபலமாகும்.

ஏற்றுமதி

தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வற்கான சாத்தியங்ளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அமரான் பேட்டரிகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. இதேபோல வளைகுடா நாடுகளில் துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றுக்கும் ஏற்றுமதியாகிறது.

சூரிய மின்னாற்றல் பயன் படுத்துவதில் வீடுகளுக்கான பேக்அப் பேட்டரி உருவாக்கத் திலும் முன்னேற்றம் எட்டப்பட் டுள்ளது. இத்துறை வளர்ச்சி யடையும்போது எங்களது தயாரிப்புகள் சந்தைக்கு வரும்.

அமரராஜா குழும நிறுவனம் பேட்டரி தயாரிப்பு மட்டுமின்றி மின்னணு பொருள் உற்பத்தி - அமரராஜா எலெக்ட்ரானிக்ஸ், மின் உற்பத்தி - அமரராஜா பவர் சிஸ்டம், கட்டமைப்புத் துறை - அமரராஜா இன்பிராஸ்ட்ரக்சர், அமரராஜா இண்டஸ்ட்ரியல் சர்வீசஸ், உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆலை குழு நிறுவனத்தின் கட்டமைப்பு வடிவமைப்பால் ஏற்படுத்தப்பட்டது என்றார்.

கிராமப்பகுதிகளில் தொழில் நுட்பத்திறனுடன் தொழில் தொடங் கும்போது கிராமப் பொருளாதாரம் மேம்படும். இந்த அடிப்படையில் குழுமம் செயல்படுவதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x