நிப்டி பட்டியலில் இருந்து ஐடிஎப்சி வெளியேறுகிறது

நிப்டி பட்டியலில் இருந்து ஐடிஎப்சி வெளியேறுகிறது
Updated on
1 min read

என்இஸ்இ 50 பங்குகளின் பட்டியலில் இருந்து ஐடிஎப்சி நிறுவனம் வெளியேறுகிறது. இதற்கு பதிலாக ஆட்டோ மொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன மான போஷ் இந்த பட்டியலில் இணைகிறது.

இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. முக்கிய குறியீடான என்.எஸ்.இ. மட்டுமல்லாமல் நிப்டி ஜூனியர், சிஎன்எக்ஸ் 100, சிஎன்எக்ஸ் 200 உள்ளிட்ட முக்கியமான குறியீடுகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நிப்டி ஜூனியர் குறியீட்டில் இருந்து போஷ் பங்கு நிப்டி 50 குறியீடுக்கு உயர்கிறது.

மேலும், அதானி என்டர்பிரைசஸ் பங்கு நிப்டி ஜூனியர் குறியீட்டில் இருந்து வெளியேறுகிறது. இதற்கு பதிலாக பிரிட்டானியா மற்றும் எம்.ஆர்.எப். ஆகிய பங்குகள் இந்த பட்டியலில் நுழைகின்றன.

சிஎன்எக்ஸ் 200 பட்டியலில் இருந்து அதானி என்டர்பிரைசஸ் மற்றும் ஐடிஎப்சி ஆகிய பங்குகள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக அல்ஸ்தோம் டி அண்ட் டீ இந்தியா மற்றும் சிட்டி யூனியன் வங்கி பங்குகள் இணைகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in