

பிரிக்ஸ் வங்கியில் பணிபுரிய காத்திருக்கிறேன் என்று வங்கியாளர் கே.வி. காமத் தெரிவித்திருக்கிறார். புதிதாக அமையவுள்ள பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவராக தன்னை நியமித்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்தார் கே.வி.காமத்.
10,000 கோடி டாலரில் தொடங்க உள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக கே.வி.காமத் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். பிரிக்ஸ் நாடுகளுக்கான வங்கி புதிய மேம்பாட்டு வங்கி (என்.டி.பி) என்று அழைக்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கியில் பணியாற் றிய இவர் ஐந்தாண்டுகளுக்கு இந்த வங்கியின் தலைவராக இருப்பார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் தலைவர்கள் புதிய மேம்பாட்டு வங்கியை அமைப் பதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வருடம் கையெழுத்திட்டார்கள். ஒப்பந்தத்தின்படி முதல் தலைவரை இந்தியா நியமிக்கும் உரிமை பெற்றது.
கே.வி.காமத் பல நிறுவனங் களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். புதிய வங்கியில் தலைவராக பொறுப்பேற்கும் முன்பு அனைத்து நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்தும் விலகிவிடுவார் என்று நிதித்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரஷி தெரிவித்தார்.