Published : 11 May 2015 09:50 AM
Last Updated : 11 May 2015 09:50 AM

நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் ஹெச்டிஎப்சி

சர்வதேச அளவில் நுகர்வோர் நிதிச்சேவை நிறுவனங்களில் ஹெச்டிஎப்சி முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் உள்ள இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் ஹெச்டிஎப்சிதான்.

இந்த பட்டியலில் ஹெச்டிஎப்சி 7-வது இடத்தை பிடித்திருக்கிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் முதல் இடத்திலும், கேபிடல் ஒன் பைனான்சியல் 2-வது இடத்திலும், விசா, டிஸ்கவர் பைனான்ஸியல் சர்வீசஸ், ஓரிக்ஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்திருக்கின்றன.

எட்டாவது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த சிஐடி குழுமமும், தைவான் நாட்டை சேர்ந்த Hua Nan Financial 9வது இடம் மற்றும் சீனாவைச் சேர்ந்த Franshion Properties பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x