

பொதுத்துறை வங்கியான ஐஓபியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 87% சரிந்து 35 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 268 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2014-15) வங்கி 454 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதி 601 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் 6,475 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 6,704 கோடி ரூபாயாக உள்ளது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 26,076 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) 24,853 கோடி ரூபாய் இருந்தது. மார்ச் 31ம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக்கடன் 8.33 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 5.68 சதவீதமாகவும் உள்ளது. வர்த்தகத்தின் முடிவில் 1.70 சதவீதம் சரிந்து 40.50 ரூபாயில் முடிவடைந்தது.