

அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் நிதிச்சேவை பெறும் மக்களின் எண்ணிகை உயரும் என்று பிக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் நிதிச்சேவை என்னும் இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு, மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் அந்த இலக்கை அடைவதற்கு அதிகமான இந்தியர்களை நோக்கி செல்ல முடியும் என்று பிக்கி அமைப்பின் தலைவர் ஜோத்ஸ்னா சூரி தெரிவித்தார்.
அடல் பென்சன் யோஜனா,(ஏபிஒய்) பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா(பிஎம்ஜேஜேபிஒய்) ஆகிய மூன்று திட்டங்களை கொல்கத்தாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பிஎம்எஸ்பிஒய் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 ரூபாய்க்கு விபத்து காப்பீடு கிடைக்கும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் மரணம் மற்றும் நிரந்தர உறுப்பு ஊனம் ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடைக்கும். வங்கி கணக்கு வைத்திருப்பவர் 18 முதல் 70 வரை இருப்பவர்கள் அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தை எடுக்க முடியும்.
பிஎம்ஜேஜேபிஒய் பாலிசியின் கீழ் ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் செலுத்துவதன் மூலம் 2 லட்ச ரூபாய்க்கு காப்பீடு கிடைக்கும். 18 முதல் 50 வயதுள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க முடியும். ஏபிஒய் பாலிசி என்பது ஓய்வூதியத் திட்டமாகும்.
இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது, பல இந்தியர்கள் முறை யான நிதி அமைப்புக்குள் வருவார்கள் என்று சூரி தெரிவித்தார்.